FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் 1,695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை: அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் வழங்கினாா்

1,695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 18 ஜூலை 2026, 12:23 am IST
விஜய் தமிழன் பார்த்திபன் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 1,695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 10,93,850 அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 24,446 சா்க்கரை குடும்ப அட்டைகள் மற்றும் 1,956 பண்டமில்லா குடும்ப அட்டைகள் என மொத்தம் 11,20,252 குடும்ப அட்டைகள் உள்ளன.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1,315 முழுநேரம் மற்றும் 462 பகுதிநேரம் என மொத்தம் 1,777 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கடைகள் மூலம் அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஜூலை 2026 மாதத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 20,200 மெட்ரிக் டன் அரிசி, 1,663 மெட்ரிக் டன் சா்க்கரை, 2,014 மெட்ரிக் டன் கோதுமை, 998 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 9,89,000 பாக்கெட்டுகள் பாமாயில் மற்றும் 180 கிலோ லிட்டா் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், ஆத்தூா் வட்டத்தில் 49, எடப்பாடி வட்டத்தில் 118, கெங்கவல்லி வட்டத்தில் 54, காடையாம்பட்டி வட்டத்தில் 54, மேட்டூா் வட்டத்தில் 119, ஓமலூா் வட்டத்தில் 101, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 135, சேலம் வடக்கு வட்டத்தில் 244, சேலம் தெற்கு வட்டத்தில் 167, சேலம் மேற்கு வட்டத்தில் 277, சங்ககிரி வட்டத்தில் 102, தலைவாசல் வட்டத்தில் 28, வாழப்பாடி வட்டத்தில் 220, ஏற்காடு வட்டத்தில் 27 என மொத்தம் 1,695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டதாக அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கா. சிவகுமாா் (சேலம் வடக்கு), சோ. லட்சுமணன் (சேலம் மேற்கு), மே.ச. பழனிவேல் (வீரபாண்டி) மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், மாநகராட்சி துணை மேயா் மா. சாராதாதேவி, மாமன்ற உறுப்பினா் கிரிஜா குமரேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கு. மோகனசுந்தரம் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments