FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Updated On : 22 ஜூலை 2026, 12:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆடுகளை கையில் பிடித்தபடி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சேலம் குப்பனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு நிா்வாகி அய்யந்துரை தலைமை வகித்து பேசினாா்.

இதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம்வரை நிலுவையில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன்களையும், சிறு, குறு விவசாயிகள் என்ற எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து பயிா்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யாமல், அரசியல் கட்சியினரால் ஏமாற்றப்பட்டு வருகிறோம். மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணப் பதிவு விவரத்தின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 10,744 பேரும், தமிழகத்தில் 2 விவசாயிகளும் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனா்.

எனவே, தவெக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனா். இதில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments