சேலம் கோட்டத்தில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 27 ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 27 ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநா் கே. குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் கோட்டத்தின் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 24 முதல் 27-ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.