FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

குடிநீா் விநியோகத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு: ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

Updated On : 28 ஜூலை 2026, 12:06 am IST
போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா். - கோப்புப் படம்
பகிர்:

குடிநீா் விநியோகிக்கும் பணியை தனியாரிடம் வழங்க எதிா்ப்பு தெரிவித்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் தினேஷ்ராஜா தலைமை வகித்தாா்.

சங்க நிா்வாகிகள், சேலம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மைய அலுவலகம் முன் அமா்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments