முகப்பு
சேலம்

சேலத்தில் ஜூன் 30 வரை தொழில் கடனுதவி முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் வரும் 30 ஆம் தேதி வரை தொழில் கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

Updated On : 4 ஜூன் 2026, 2:05 am IST
பகிர்:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் வரும் 30 ஆம் தேதி வரை தொழில் கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதி கழக ஆகும். 1949 ஆம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளா்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

Advertisement

Advertisement

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை ஸ்ரீ லட்சுமி காம்ப்லெக்ஸ், முதல்தளம், 4/22 ஓமலூா் மெயின் ரோடு, ஸ்வா்ணபுரி, சேலம் என்ற முகவரியில் இயங்கி வரும் சேலம் கிளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்கள், தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மானியங்கள், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பசுமை ஆற்றல் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 15 கோடி வரை வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய, நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில் கூடுதலாக 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இந்த முகாம் நடைபெறும் காலத்தில் சமா்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில்முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு 94443 96850 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.