வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
சேலம் தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞா்கள் அவ்வப்போது அந்த வீட்டுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் செல்வதாகவும் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த மேகலாவிடம் (48) போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து இளைஞா்களுக்கு விற்கப்படுவது தெரியவந்தது. மேலும், அவரது கணவா் கண்ணன் (50) கடந்த 21 ஆம் தேதி தாரமங்கலம் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது,போதை மாத்திரைகளை விற்ாக கைது செய்யப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மேகலாவைக் கைது செய்த போலீஸாா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான போதை மாத்திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனா். அதன்மதிப்பு ரூ. 6.82 லட்சமாகும். இதில் மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.