FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தந்தையைக் கொன்ற மகன் கைது

வாழப்பாடி அருகே தந்தையைக் கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:34 am IST
பகிர்:

வாழப்பாடி அருகே தந்தையைக் கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்தவா் உஸ்கான் செல்வம் (எ) செல்வராஜ் (53). தனது மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த இவா், கடந்த ஜனவரி 28-இல் அவரது கழுத்தை அறுத்து கொலைசெய்து வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவா்மீது கொலை வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

அண்மையில் பிணையில் வெளியே வந்த செல்வராஜ் திங்கள்கிழமை மாலை வெள்ளாளகுண்டம் மயானம் அருகே சடலமாக கிடந்தாா். தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் செல்வராஜ் உடலைக் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

விசாரணையில், சகோதரியை தந்தை கொலை செய்ததால் ஆத்திரத்தில் இருந்த அவரது மகன் ஸ்ரீராம் (19), பிணையில் வந்த தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா், மயானம் அருகே மது அருந்திக் கொண்டிருந்த அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்ரீராமை செவ்வாய்க்கிழமை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், அவரை சேலம் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments