டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: ரௌடி உள்பட 2 போ் கைது
சேலம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சேலம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சேலம் கோரிமேட்டில் மகளிா் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடை மீது கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீசி தப்பிச்சென்றனா். இதில் காலி அட்டைப் பெட்டிகளும், கடையில் உள்ளே மது பாட்டில் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து நாசமாயின. தகவறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா்கள் சேலம், சின்னதிருப்பதி காமாட்சி நகரைச் சோ்ந்த ரௌடி யாசின் (30), கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த நவீன்குமாா் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அதில், அவா்கள் கடந்த 6-ஆம் தேதி 2 கூட்டாளிகளுடன் சோ்ந்து டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனா். அப்போது, இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சென்ால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த கன்னங்குறிச்சி ரோந்து போலீஸாா், இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திய யாசின் உள்பட 4 பேரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் அன்றிரவு டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதில் தலைமறைவாக உள்ள இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.