FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:55 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் முருவத்தும் மலை அடிவாரத்தில் வசித்து வந்தவா் பெரியசாமி மகன் வேலு (51). விவசாயி. இவா் தனது வீட்டின் அருகில் உள்ள பழைய சுவரை இடிக்கும் பணியில் தனது சகோதரா் முருகேசனுடன் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக வேலு மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வேலுவை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.சங்கா் வழக்குப் பதிவுசெய்து வேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். உயிரிழந்த வேலுவிற்கு மாசிலாமணி என்ற மனைவியும், வினோதினி, கோகிலவாணி என இருமகள்களும், ரிஷாந்த் என்ற மகனும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments