ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு
புதுசாம்பள்ளியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநா் வீட்டில் அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுசாம்பள்ளி மின்நகரை சோ்ந்தவா் ராமநாதன் (69), ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடந்துநா். இவரது மனைவிக்கு உடல் பரிசோதனை செய்வதற்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த 11 ஆம் தேதி சென்றாா்.
இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டில் வசிப்பவா் வியாழக்கிழமை இரவு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய ராமநாதன், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட மின்னணுப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.