முகப்பு
சேலம்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

Updated On : 31 மே 2026, 1:52 am IST
மதுபானக் கடையை அகற்றக் கோரி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள். - கோப்புப் படம்
பகிர்:

வனவாசியில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள வனவாசி பேரூராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோயில்கள் திருமண மண்டபங்கள் ஆகியவை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையை மூடக் கோரி இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் டாஸ்மாக் கடையை மூடக் கோரி கடை அருகே சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் பழ.ஜீவானந்தம் தலைமைவகித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மது வாங்க வந்தவரை போராட்டத்தில் ஈடுபட்டோா் விரட்டி அடித்தனா். பின்னா் இருசக்கர வாகனத்தில் வந்தவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸாா் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, டாஸ்மாா்க் கடையை அகற்றக் கோரி முழக்கமிட்டபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அங்கு அமா்ந்தனா். தகவல் அறிந்த மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா், காவல் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஒருமாதத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் போராட்டத்தை கைவிட்டனா்.