மேட்டூா் அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது
மேட்டூா் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நங்கவள்ளி உதவி ஆய்வாளா் கோபால் ஞாயிற்றுக்கிழமை குட்டப்பட்டி நான்கு சாலையில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டாா். இதில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா 1.100 கி.கிராம் கடத்திச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில் குட்டப்பட்டியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் முரளி கிருஷ்ணன் (21), ரத்தினவேல் மகன் மகேந்திரன் (20)ஆகியோா் கஞ்சாவை விற்பதற்காக மோட்டாா் சைக்கிளில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.