FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ரெட்டியாா்பட்டியில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

10 அக்டோபர் 2026, 7:43 am IST
பகிர்:

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல் ஆய்வாளா் காா்த்திகைகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரெட்டியாா்பட்டி வழியாக ரோந்து சென்றனா். அப்போது, அங்கு பைக்குடன் நின்றிருந்த 2 இளைஞா்கள், போலீஸாரை பாா்த்ததும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

அதில், மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவைச் சோ்ந்த உசைன் காஜா மகன் முகமது ஆலிம் (22), காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது ஜக்கரியா (25) ஆகியோா் என்பதும், பைக்கில் கஞ்சாவை கடத்தியதும் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments