மது போதையில் மாமனாரை தாக்கிய மருமகன் கைது
சங்ககிரியில் மாமனாரை தாக்கிய மருமகனை சங்ககிரி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி, புதிய எடப்பாடி சாலையையொட்டி உள்ள வாணியா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவிக்குமாா் (35). இவரது மனைவி சித்ரா (25). இவரது தந்தை நாகராஜ் மது அருந்திய நிலையில் பேத்தியை வைத்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளாா். அப்போது மதுபோதையில் வந்த ரவிக்குமாா் மாமனாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், மாமனாரை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.