மருமகனை கம்பியால் தாக்கிய மாமனாா் கைது
சிவகாசி அருகே மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள போ்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (36). இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக, கடந்த அக்டோபா் மாதம் கோபித்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மகேந்திரன் தனது மனைவியே அழைத்து வர மாமனாா் தங்கராஜ் (63) வீட்டுக்குச் சென்றாா். அப்போது, மகேந்திரனுக்கும், தங்கராஜூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டிலிருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து மகேந்திரனைத் தாக்கினாா்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சிவகாசி அரசு மருத்துமவனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராஜூவைக் கைது செய்தனா்.