FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை: சேலம் ரயில்வே கோட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எச்சரித்துள்ளது.

6 நவம்பர் 2026, 1:06 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பட்டாசு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது.

Advertisement

Advertisement

இத்தகைய பொருள்களைக் கொண்டு செல்வது பயணிகளின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றை பயணிகள் தங்களது உடைமைகளில் வைத்திருக்கக் கூடாது. 1989-ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் 67-ஆவது பிரிவின்படி, அபாயகரமான பொருள்களை ரயிலில் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் 164-ஆவது பிரிவின்படி, தடையை மீறி அபாயகரமான பொருள்களைக் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ரயில் நிலையங்களிலோ, ரயில்களிலோ பட்டாசு உள்ளிட்ட அபாயகரமான பொருள்களை யாரேனும் எடுத்துச் செல்வது தெரியவந்தால், உடனடியாக ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் அல்லது ரயில்வே உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பயணிகள் தங்களது பாதுகாப்புடன் சக பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், ரயில்வே விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.