FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 10,872 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 10,872 கனஅடியாக அதிகரித்துள்ளது.

7 நவம்பர் 2026, 2:10 am
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 10,872 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகள், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகள், காவிரி துணை நதிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வெள்ளிக்கிழமை காலை 8,237 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, மாலை 10,872 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணையில் இருந்து 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 57.79 அடியிலிருந்து 58.18 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 23.34 டிஎம்சியாக உள்ளது.