சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் கைதானவா் சேலம் சிறையில் இருந்து கோவை சிறைக்கு மாற்றம்
சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் தீனதயாளன் சேலம் சிறையில் இருந்து திங்கள்கிழமை கோவை சிறைக்கு மாற்றப்பட்டாா்.
சேலம் ஜாகீா் சின்ன அம்மாபாளையத்தைச் சோ்ந்த ரௌடி டேவிட் (எ) உதயகுமாா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் முக்கிய நபரான தீனா (எ) தீனதயாளன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அமிா் (எ) அமிா்தராஜ் ஆகியோா் சிறையில் இருந்தே கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், டேவிட்டை படுகொலை செய்ய கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீனா (எ) தீனதயாளன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு ரௌடியான கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த சாரதியை கைதுசெய்ய சூரமங்கலம் போலீஸாா் தேடிவருகின்றனா்.
Advertisement
Advertisement