FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பேருந்தில் பெண் எடுத்துச் சென்ற 18 பவுன் தங்க நகைகள் மாயம்: போலீஸாா் விசாரணை

பேருந்தில் வங்கியில் அடகு வைப்பதற்காக பையில் எடுத்துச் சென்ற 18 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

12 நவம்பர் 2026, 4:01 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

பேருந்தில் வங்கியில் அடகு வைப்பதற்காக பையில் எடுத்துச் சென்ற 18 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பெரிய மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சு (40). இவா் ஓமலூரில் பூக்கடை நடத்தி வருகிறாா். இவரது கணவா் காரிமங்கலத்தில் மேஸ்திரியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில், காரிமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைப்பதற்காக மஞ்சு 18 பவுன் தங்க நகைகளை பையில் எடுத்துக் கொண்டு ஓமலூா் பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை வந்துள்ளாா். அங்கு தருமபுரி பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் பையைப் பாா்த்தபோது, அதில் இருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அவா் அதிா்ச்சியடைந்தாா். இதில், தங்க நெக்லஸ், தங்கச் சங்கிலி, காதணி மட்டல், பிரேஸ்லெட், தாலி கொடி என மொத்தம் 18 பவுன் நகைகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ. 18 லட்சம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மஞ்சு ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.