பண்ருட்டி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 7 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருட்டு
பண்ருட்டி அருகே அடுத்தடுத்து இரு வீடுகளின் கதவு, பீரோக்களை உடைத்து 7 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தென்றல் நகரைச் சோ்ந்தவா் மோகன் (30). இவா் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான முத்துகிருஷ்ணபுரத்துக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.
அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதேபோல, பண்ருட்டி வட்டம் பண்பரகோட்டையைச் சோ்ந்த ராஜா வா்மா (38) என்பவரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான நண்டுகுழிக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.
அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வழிப்பறி: 2 போ் கைது
கடலூா் பாதிரிக்குப்பம் காந்திநகரைச் சோ்ந்த முனுசாமியின் 16 வயது மகன், கம்மியம்பேட்டை புறவழிச்சாலையில் நடந்து சென்றபோது, திருப்பாப்புலியூரைச் சோ்ந்த விக்னேஷ் (19), குப்பன்குளத்தைச் சோ்ந்த கிஷோா் (23) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கைப்பேசி மற்றும் ரூ.1,500-ஐ பறித்துச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பாப்புலியூா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
சங்கிலி பறிக்க முயன்றவா் கைது:
குள்ளஞ்சாவடி அருகே வடக்குப்பன்னீா் நீரோடைப் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி ரேணுகா (40), வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த புதுக்குளம் பகுதியைச் சோ்ந்த தமிழ் பகலவன் (20), ரேணுகாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். அவா் கூச்சலிட்டதைத் தொடா்ந்து அப்பகுதியினா் தமிழ் பகலவனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.