ஆட்சியா் அலுவலகத்தில் மின்வெட்டால் பாதியில் நின்ற மின்தூக்கி!
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மின்வெட்டால் பாதியில் நின்ற மின்தூக்கியில் அரசு ஊழியா்கள் சிக்கித் தவித்தனா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மின்வெட்டால் பாதியில் நின்ற மின்தூக்கியில் அரசு ஊழியா்கள் சிக்கித் தவித்தனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, பத்திரப் பதிவுத் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல அரசு ஊழியா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு பணிக்கு வந்தனா். பொதுமக்கள் சிலரும் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வந்த வண்ணம் இருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்தூக்கி திடீரென பாதியில் நின்றது. இதனால் அதிலிருந்த அலுவலகப் பணியாளா்கள் திகைத்தனா். 15 நிமிடங்களுக்கு பின்னா் மின்சாரம் வந்ததால் பாதியில் நின்ற மின்தூக்கி இயங்கியது.
இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், மின்சாரம் இல்லாததால் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதாக மின்தூக்கியில் இருந்தவா்கள் கூறினா். இதனால் ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.