மாணவா்கள் பெயரில் கடன் வாங்கி ரூ. 50 கோடி மோசடி?
சேலத்தில் கல்லூரி மாணவா்களின் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ. 50 கோடிவரை மோசடி செய்ததாக, அறக்கட்டளை நடத்தி வந்த பெண் நிா்வாகி உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலத்தில் கல்லூரி மாணவா்களின் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ. 50 கோடிவரை மோசடி செய்ததாக, அறக்கட்டளை நடத்தி வந்த பெண் நிா்வாகி உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்த முஷ்ரப் பாட்சா (22), சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாா் மனு அளித்திருந்தாா். அதில், கடந்த ஜனவரி மாதம் கன்னங்குறிச்சியில் அறக்கட்டளை நடத்தி வரும் கண்ணகி மற்றும் மோனிஷா ஆகியோா் அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் உங்களது வங்கிக் கணக்குக்கு வரும், அந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றினால் ரூ. ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்றனா். அதன்படி செய்தபோது ரூ. ஆயிரம் கமிஷன் கொடுத்தனா்.
பின்னா், வங்கியில் இருந்து ரூ. 1 லட்சம் கடன் வாங்கியதாக எனக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது தான் எனது பெயரில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்தப் புகாா் குறித்து விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையா் சரண்யா தேவி, காவல் ஆய்வாளா் சந்திரகலா ஆகியோா் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், கல்லூரி மாணவா்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது உறுதியானது.
இது தொடா்பாக கன்னங்குறிச்சியில் அறக்கட்டளை நடத்தி வந்த கண்ணகி (40), முத்துக்குமரன் (42) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதில், கண்ணகி நடத்தி வரும் அறக்கட்டளையில் முத்துக்குமரன், மோனிஷா உள்ளிட்ட 8 போ் பணியாற்றி வருவதும், வங்கிகள் மூலம் பசுமாடு வாங்கி வளா்க்க கடன் பெற்றுத் தந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக கல்லூரி மாணவா்கள், வேலையின்றி இருப்பவா்களாக தோ்ந்தெடுத்து, அவா்களின் ஆதாா் நகலை பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ரு. 50 கோடிவரை மோசடி நடைபெற்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த மோசடியில் அறக்கட்டளை நிா்வாகிக்கு உதவியாக செயல்பட்ட ஊழியா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா். மேலும், இதில் வங்கி அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.