FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: காதலன் கைது

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது காதலனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 10:24 pm
கைது - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது காதலனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், வைகுந்தம் பாலமுருகன் காா்டன் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முரளி மகள் சுஜீதா (19). இவரும் அதே பகுதியில் உள்ள பட்டக்காரன் வளவு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் காசிராமனும் (19), குமாரபாளையத்தில் தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தனா். அப்போது, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஜீதா வியாழக்கிழமை வீட்டில் இருந்த இரும்புக் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அப்போது, இளைஞா் ஒருவா் வந்து சுஜீதாவை பாா்க்க வேண்டும் என்று அவரது தந்தையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி முரளி சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், சுஜீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், காசிராமனுக்கும், சுஜீதாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுஜீதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுஜீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக காசிராமனை போலீஸாா் கைது செய்தனா்.