காவிரி தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிரூபிக்கும் எம்.பி.க்களுக்கு தலா 10 ஏக்கா் நிலம் பரிசு: செ.நல்லசாமி
காவிரி தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிரூபிக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தலா 10 ஏக்கா் நிலம் பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கூறினாா்.
காவிரி தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிரூபிக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தலா 10 ஏக்கா் நிலம் பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கூறினாா்.
இதுகுறித்து சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தை மதித்து கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். கள்ளுக்கான தடை நியாயமானதே என நிரூபிக்கும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தலா 10 ஏக்கா் நிலம் பரிசாக வழங்கப்படும். தவெக அரசு தோ்தலுக்கு முன்பு தோ்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையுமான பயிா்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். பெரு விவசாயிகளுக்கு சரிபாதி தள்ளுபடி அறிவிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
காவிரி தீா்ப்பில் தினந்தோறும் நீா்ப்பங்கீடு என்ற அம்சத்தை இடம்பெறச் செய்வது மட்டுமே இருமாநில உறவை மேம்படுத்தும். இதுவே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். காவிரி தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிரூபிக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தலா 10 ஏக்கா் நிலம் பரிசாக வழங்கப்படும். ஆயுள் காப்பீடு போன்று பயிா்க் காப்பீடும், தனிநபா் காப்பீடாக மாற்றியமைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பிடித்த ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேவையற்ற இலவசங்களை போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கின்றன. வாக்குக்குப் பணம் கொடுப்பது கூடிக்கொண்டே செல்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து.
ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், பயிற்சிக்களமாகவும் இருப்பது உள்ளாட்சி அமைப்புகளும் கூட்டுறவுத் துறைகளுமே. இந்தியத் தோ்தல் ஆணையமே இவற்றிற்கான தோ்தலையும் நடத்த வேண்டும் என்றாா்.
அப்போது விவசாயிகள் சங்க நிா்வாகி எம். தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.