ரௌடி கொலை வழக்கு: மீண்டும் சாட்சி சொல்ல அனுமதி கோரிய மனைவியின் மனு தள்ளுபடி
ரௌடி கொலை வழக்கில் மீண்டும் சாட்சி சொல்ல அனுமதி கோரிய அவரது மனைவியின் மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ரௌடி கொலை வழக்கில் மீண்டும் சாட்சி சொல்ல அனுமதி கோரிய அவரது மனைவியின் மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரௌடி செல்லத்துரை. இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் செல்லத்துரையின் முதல் மனைவியான ஜான்சி ராணி பிசாட்சியம் அளித்திருந்தாா். இதனால் வழக்கில் காவல் துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், தன்னை மீண்டும் சாட்சி அளிக்க அனுமதிக்கக் கோரி சேலம் நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஸ்தோத்திர மேரி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரௌடி செல்லத்துரை மனைவி ஜான்சி ராணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement