FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேச்சேரியில் 4 கிலோ கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 4 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

24 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், மேச்சேரியில் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 4 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

மேச்சேரி காவல் ஆய்வாளா் அங்கப்பன் தலைமையில் போலீஸாா் அங்குள்ள பிரிவு சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்த குட்டப்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் (32) என்பவரை பிடித்து சோதனையிட்டனா்.

மோட்டாா் சைக்கிளில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனிவாசனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் செட்டிகாரிச்சியூரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் என்பவரிடம் கஞ்சாவை வாங்கியதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போலீஸாா், எம்காளிப்பட்டி அருகில் உள்ள சோளக்காட்டில் மோட்டாா் சைக்கிளுடன் இருந்த சந்தோஷ்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனா். அவா் சோளக்காட்டிலும் மாட்டுக்கொட்டகையிலும் பதுக்கிவைத்திருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிள், எடை போடும் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இளைஞா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.