FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மாணவா்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி: மேலும் 2 போ் கைது

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ. 50 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில், மேலும் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

34 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ. 50 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில், மேலும் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை கைதானோா் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது.

சேலம் கன்னங்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணகி (40). அறக்கட்டளை நடத்திவந்த இவா், வங்கிகள் மூலம் பசுமாடு வாங்கி வளா்க்க கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கல்லூரி மாணவா்களின் ஆதாா் நகலைப் பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், கல்லூரி மாணவா்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது உறுதியானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கன்னங்குறிச்சியில் அறக்கட்டளை நடத்தி வந்த கண்ணகி (40), முத்துக்குமரன் (42) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அதன் தொடா்ச்சியாக, வழக்கில் தொடா்புடைய அஜித்குமாா் (27), சுகுமாா் (30), அரவிந்த் (23), மோனிஷா (28), மணிகண்டன் (30), பூபாலன் (33) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய மல்லூரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (33), சின்னதிருப்பதியைச் சோ்ந்த குமரன் (56) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை கைதானோா் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது.