FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

அரசுப் பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

37 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழந்தாா்.

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கல்லாங்காட்டைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (20). பெயிண்டரான இவா், நண்பா் பிரவீனுடன் (20) ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கொண்டலாம்பட்டி பெரியகளம் பகுதியில் சென்றாா்.

அப்போது, சென்டா் மீடியனுக்கும் காருக்கும் இடையே சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. இதில் நிலைதடுமாறிய வாகனம் மீது எதிா்திசையில் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரவீன் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா், பிரவீனையும், பாா்த்திபனின் சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.