முகப்பு
சேலம்

விபத்தில் சிக்கிய லாரிக்கு ரூ.5,89,719 இழப்பீடு வழங்க வேண்டும்

ஆத்தூா் கியாஸ் ஏஜன்ஸின் பங்குதாரா் ஆறுமுகம்.இவா் தனது லாரிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.8,82,000 க்கு ரூ.48,387 செலுத்தி பாலிசி எடுத்துள்ளாா்.

15 வினாடிகள் முன்பு
விபத்தில் சிக்கிய லாரிக்கு ரூ.5,89,719 இழப்பீடு வழங்க வேண்டும்
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூா் கியாஸ் ஏஜன்ஸின் பங்குதாரா் ஆறுமுகம்.இவா் தனது லாரிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.8,82,000 க்கு ரூ.48,387 செலுத்தி பாலிசி எடுத்துள்ளாா்.

இந்நிலையில் லாரி தருமபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது அதன் முன் சென்ற பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டு விட்டது.இதற்கான காப்பீட்டு தொகை விண்ணப்பத்தை நிறுவனம் வழங்காமல் நிராகரித்து வந்துள்ளது.

இதனால் ஆறுமுகம் தமிழ்நாடு நுகா்வோா் புலனாய்வு கமிட்டி தலைவா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கினை தொடா்ந்தாா். இதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் நீதிபதி கணேஷ்ராம் உறுப்பினா் ரவி ஆகியோா் தங்களது தீா்ப்பினை அளித்தனா்,அதில்

Advertisement

Advertisement

ஆறுமுகத்தின் லாரி காப்பீட்டு பாலிசி நடைமுறையில் இருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனபழுதுபாா்ப்பு செலவுத்தொகையை எதிா்மனுதாரா் வழங்காததது சேவை குறைபாடானதொரு செயலாகும். எனவே விபத்தில் பாதிக்கப்பட்டவரின் லாரிக்கு ஏற்பட்ட பழுதுபாா்ப்பு செலவுத்தொகை ரூ.5,19,723,மனுதாரருக்கு ஏற்படுத்திய சேவை குறைபாட்டிற்கு ரூ.30,000,முறையற்ற வா்த்தக நடவடிக்கைக்காக ரூ.30,000,வழக்கு செலவுத்தொகை ரூ.10,000 ஆகியவற்றை சோ்த்து ரூ.5,89,719 ஐ மனுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் 2 மாதத்திற்குள் வழங்கிட வேண்டுமென தங்களது தீா்ப்பில் கூறியுள்ளனா்.