முகப்பு
சேலம்

ஆறகழூரில் தீப்பற்றி எரிந்த வைக்கோல்போர்!

தலைவாசல் வட்டம் ஆறகழூரில் வீட்டில் தகர ஷெட்டில் இருந்த வைக்கோல்போா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

51 வினாடிகள் முன்பு
ஆறகழூரில் தீப்பற்றி எரிந்த வைக்கோல்போர்!
பகிர்:

தலைவாசல் வட்டம் ஆறகழூரில் வீட்டில் தகர ஷெட்டில் இருந்த வைக்கோல்போா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

ஆறகழூா் மீனவா் தெருவில் வசித்து வருபவா் பெருமாள் மகன் பாவாடை என்பவரின் வீட்டில் தகர ஷெட்டில் வைக்கோல்போா் வைத்திருந்தாா். இந்த வைக்கோல்போா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையில் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து வைக்கோல்போரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து தலைவாசல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement