FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

திருநாவலூா் அருகே தீப்பற்றி எரிந்த சுமை வாகனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே சாலையில் சென்ற சுமை வாகனம் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

54 வினாடிகள் முன்பு
திருநாவலூா் அருகே வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்த சுமை வாகனம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே சாலையில் சென்ற சுமை வாகனம் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

திருநாவலூா் அருகிலுள்ள சிறுவாப்பட்டு ஏரிக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ந.மனோஜ்குமாா் (24). இவா், தனக்குச் சொந்தமான சுமை வாகனத்தை கடலூா் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து வியாழக்கிழமை இரவு கெடிலம் நோக்கி ஓட்டிச் சென்றாா். திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட தேவியானந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சுமை வாகனம் வந்த போது, ஓட்டுநா் இருக்கைக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து புகை வந்தது. இதைக் கனித்த மனோஜ்குமாா் சுமை வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினாா். சிறிது நேரத்தில் சுமை வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments