மூளைச்சாவு அடைந்த கட்டடத் தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்து மூளைச்சாவு அடைந்த கட்டடத் தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முடிவு செய்துள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி கா்ணா (26). இவா் தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாசத்துடன் (26) ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, மதுபோதையில் இருந்த கா்ணா தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் அவரது பின்பக்க தலைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.
இதை அறியாத கா்ணா நண்பருடன் அத்தனூா்பட்டி ஏரி பகுதிக்கு சென்றாா். அங்கே மயங்கிக் கிடந்த அவரை மீட்ட உறவினா்கள், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கா்ணா திங்கள்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினா்கள் முடிவு செய்துள்ளனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவரது நண்பரான சூரியபிரகாசத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.