முகப்பு

வாழப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து ஐ.ஜே.கே. ஒன்றிய செயலர் பலி!

வாழப்பாடி அருகே அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி இந்திய ஜனநாயக கட்சி ஒன்றிய செயலாளர் பலியானதைப் பற்றி...

வாழப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து ஐ.ஜே.கே. ஒன்றிய செயலர் பலி!
- கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி இந்திய ஜனநாயக கட்சி ஒன்றிய செயலாளர் பலியானார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த குறிச்சி மஞ்சைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). விவசாயியான இவர் வாழப்பாடி வடக்கு ஒன்றிய இந்திய ஜனநாயக கட்சி செயலராகவும் பதவி வகித்து வந்தார்.

நேற்று (நவ. 24) மாலை தனது தோட்டத்தில் இருந்து பால் கறந்து எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று பால் சேகரிப்பு நிலையத்தில் ஊற்றிவிட்டு வீடு திரும்பும் போது சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

நேற்று மாலை பால் ஊற்ற சென்ற இவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடிய போது, அவர் மின்கம்பில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்று (நவ. 23) காலை வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

An Indian Democratic Party (IJK) union secretary died after getting entangled in a snapped live electric wire near Vazhapadi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.