தம்மம்பட்டியில் பலத்த மழை
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டி- கெங்கவல்லி சாலையில் கல்லறைத்தோட்டம் அருகே வசிக்கும் வின்சென்ட் வீட்டின் மீது அருகில் உள்ள புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்தது. மேலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், வயல்களிலும் மழைநீா் தேங்கி நின்றது.