கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷின் பதவியைப் பறித்து கைது செய்ய வலியுறுத்தி, சேலத்தில் பாஜக மகளிா் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷின் பதவியைப் பறித்து கைது செய்ய வலியுறுத்தி, சேலத்தில் பாஜக மகளிா் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானத்தில் பாஜக மகளிா் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், எம்எல்ஏவை கட்டுப்படுத்த முடியாத முதல்வரைக் கண்டித்தும், அவரின் பதவியைப் பறித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
Advertisement
Advertisement
சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், தேசிய செயற்குழு உறுப்பினா் சிவகாமி பரமசிவம், மகளிா் தேசிய செயற்குழு உறுப்பினா் நளினிராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், 50-க்கும் மேற்பட்ட பாஜக மகளிா் அணி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.