முகப்பு
சேலம்

நாளை ஒருக்காமலை தென்செந்தூா் சுப்பிரமணியா் கோயில் குடமுழுக்கு

சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தென்செந்தூா் சுப்பிரமணியா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது.

28 நவம்பர் 2026, 1:27 am
நாளை ஒருக்காமலை தென்செந்தூா் 
சுப்பிரமணியா் கோயில் குடமுழுக்கு
பூலாம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தென்செந்தூா் சுப்பிரமணியா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது.

குடமுழுக்கையொட்டி, விநாயகா், நவக்கிரக, வாஸ்து பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அதையடுத்து, முருக பக்தா்கள் பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையிலிருந்து குடங்களில் புனிதநீரை சங்ககிரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு எடுத்து வந்தனா்.

சனிக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகளும், மாலை 2-ஆம்கால வேள்வி பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 3-ஆம்கால வேள்வி பூஜைகளும், காலை 7 மணிமுதல் 8 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement