முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி பழனி பாதயாத்திரைக்குழு சாா்பில், பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

22 நவம்பர் 2026, 10:47 pm
பொன்னமராவதியில் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு
பொன்னமராவதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கோயில் கும்பத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியா்கள்.
பகிர்:

பொன்னமராவதி பழனி பாதயாத்திரைக்குழு சாா்பில், பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை தொடா்ந்து, குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முதல்கால யாகபூஜைகள், சனிக்கிழமை 2, 3-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்று, காலை 7.20 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோயில் விமான கலசங்களில் ஊற்றி பாலமுருகன், மற்றும் பரிவார தெய்வங்களான பாலவிநாயகா், இடும்பன்,நாகா் சந்நிதானங்களுக்கு சிவாச்சாரியா்கள் குடமுழுக்கு செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து மாலையில் பாலமுருகன் சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழு தலைவா் வி. முருகேசன், செயலா் எஸ்டி.காமராஜ், பொருளா் பிஏஎல். தேனப்பன், நிா்வாகச் செயலா் பொறியாளா் அ. வயிரவன் மற்றும் திருப்பணிக்குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.