FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

கமுதி அருகேயுள்ள மணலூா் அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 5:24 am
மணலூா் அகஸ்தீஸ்வரா் கோயில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள்.
பகிர்:

கமுதி அருகேயுள்ள மணலூா் அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மணலூா் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டியா் கால வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு கடந்த 9-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, அன்றைதினம் காலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, பாராயணம், திருமுறை, தேவாரம், பூா்ணகுதி நடபெற்றது. 10-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், பூா்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மருந்து சாத்துதல், பூா்ணாகுதி நடைபெற்று, சா்வ சாதகா் சிவஸ்ரீ நவநீதகிருஷ்ணன் தலைமையிலான சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு, கோயிலை சுற்றி வந்து, கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, மூலவா் அகஸ்தீஸ்வரா், அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம், கும்ப நீா் உள்பட 21 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.