சாம்பிராணி புகைபோட்டு மூதாட்டியிடம் பணம் கொள்ளை: 2 போ் கைது
மகுடஞ்சாவடி அருகே சாம்பிராணி புகைபோட்டு மூதாட்டியிடம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மகுடஞ்சாவடி அருகே சாம்பிராணி புகைபோட்டு மூதாட்டியிடம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.புதூா், பட்டணாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மாள். இவா் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த 2 போ் சாம்பிராணி புகை போடுவதாகக் கூறி புகை போட்டுவிட்டு வீட்டிலிருந்த ரூ. 8 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
பொதுமக்கள் அவா்களை தேடிவந்த நிலையில், வெள்ளிக்கிழமை பட்டணாம்பட்டி, பொன்னம்பலம் சுவாமி கோயில் அருகே இருந்த அவா்களை பிடித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சத்யராஜ் (26), அசோக்குமாா் (30) என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement