FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

46 கிலோ வெள்ளி கொள்ளை: 6 போ் கைது

பெருங்களத்தூரில் பேருந்தில் வந்த நபரை கத்தியால் வெட்டிவிட்டு, ரூ.1 கோடி மதிப்பிலான 46 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 3:37 am
கோப்புப் படம்
பகிர்:

பெருங்களத்தூரில் பேருந்தில் வந்த நபரை கத்தியால் வெட்டிவிட்டு, ரூ.1 கோடி மதிப்பிலான 46 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 8-ஆம் தேதி இரவு திருச்சியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த முகமது ஹுசைன் (26), இரண்டு பைகளில் 46 கிலோ வெள்ளிப் பொருள்களுடன் பெருங்களத்தூா் பேருந்து நிலையத்தில் இறங்கினாா். அப்போது அங்கு வந்த 10 போ் கொண்ட கும்பல் அவரை மறித்து வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

தகவலறிந்த பீா்க்கன்கரணை போலீஸாா், காயமடைந்த முகமது ஹுசைனை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

வெள்ளிப் பொருள்களை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்திவந்த மன்ஷா (25), பா்கான் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

குருவியாகச் செயல்பட்டு குறைந்த தொகையைப் பெற்று வந்த மன்ஷா, தானும் முதலாளியாக வேண்டும் என்ற ஆசையில், வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்து விற்றுப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்ளத் திட்டமிட்டது தெரிய வந்தது.

திருச்சியில் திட்டமிட்ட கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால், பெருங்களத்தூரில் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து கொள்ளையை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்காக கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த இஸ்மாயில் (30), ரிஸ்வான் அலி (26), சாதிக் பாஷா (31), சமீா் அலி (34), லாரன்ஸ் (28) உள்ளிட்ட 11 பேரைத் திட்டத்தில் இணைத்துள்ளாா். இவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை பங்கிட்டுக் கொடுக்கவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 46 கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 காா்கள், ஒரு இரு சக்கர வாகனம், 2 பட்டாக்கத்திகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.