FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

குன்னத்தூா் அருகே மாரியம்மன் கோயிலில் திருடியவா் கைது

குன்னத்தூா் அருகே செம்புத்தாம்பாளையம் மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

30 அக்டோபர் 2026, 12:15 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

குன்னத்தூா் அருகே செம்புத்தாம்பாளையம் மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓடத்தலாம்பதி அருகே குன்னத்தூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த நபரை, பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் கோவை, சின்னியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வரும், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (25) என்பதும், குன்னத்தூா் அருகே செம்புத்தாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் கடந்த ஜூன் மாதம் பூட்டை உடைத்து உள்ளிருந்த 4 கிராம் தங்கத் தாலி, 15 கிராம் வெள்ளி சங்கிலி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தனைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 4 கிராம் தங்கத் தாலி, 15 கிராம் வெள்ளி சங்கிலி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.