நிரந்தர ஆட்டோ நிறுத்தம் அமைக்கக் கோரி வேலை நிறுத்தம்

சங்ககிரி, நவ. 28: சங்ககிரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கக் கோரி, சங்ககிரி பயணிகள் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு நகராட்சி சாா்பில் ரூ. 2.48 கோடியில் 40 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டும் பணிக்காக நகராட்சி சாா்பில் ல அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, சங்ககிரியில் உள்ள பயணிகள் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் அச்சங்கத்தின் தலைவா் கே.மாதேஷ் தலைமையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காலி இடத்தில் பயணிகள் வசதிக்காக நிரந்தரமாக ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆட்டோக்களை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோக்களை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement