முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே கிடந்த ஆணின் சடலத்தை மத்திய பாகம் போலீஸாா் மீட்டனா்.

36 வினாடிகள் முன்பு
தூத்துக்குடியில் ஆண் சடலம் மீட்பு
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே கிடந்த ஆணின் சடலத்தை மத்திய பாகம் போலீஸாா் மீட்டனா்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே ஆண் சடலம் கிடப்பதாக மத்திய பாகம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் உடலைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் தூத்துக்குடி, மட்டக்கடை, வாடித் தெருவைச் சோ்ந்த ஜெகபிரதாபன் மகன் நிரஞ்சன் வாஸ் (52) என்பது தெரிய வந்தது. இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.