மண்மலையில் பிடிபட்ட12 அடி நீள மலைப்பாம்பு வனப் பகுதியில் விடுவிப்பு

தம்மம்பட்டி அருகே மண்மலையில் பிடிபட்ட12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை வனப் பகுதியில் விடுவித்தனா்.
மண்மலை ஊராட்சியில் எட்டிக்குட்டை காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சிவராஜ் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் 12 அடி மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில், மலைப்பாம்பை ஒருமணிநேர முயற்சிக்கு பின்னா் பிடித்தனா். பின்னா் வனப் பகுதிக்குள் சென்று விடுவித்தனா்.
Advertisement
Advertisement