FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மதுபோதையில் தகராறு செய்த பெண்ணை தாக்கியவா் கைது

தம்மம்பட்டியில் மதுபோதையில் தகராறு செய்த பெண்ணை தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 6:01 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தம்மம்பட்டியில் மதுபோதையில் தகராறு செய்த பெண்ணை தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி 15-ஆவது வாா்டை சோ்ந்தவா் குமாா். இவா் மனைவி கயல்விழி (36). கூலித் தொழிலாளியான இவா்களுக்கு 17, 14 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனா்.

கயல்விழிக்கு மதுப்பழக்கம் உள்ளது. வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வந்த அவா் மது அருந்திவிட்டு கணவரிடம் தகராறு செய்துள்ளாா். அதற்கு, ‘குழந்தைகள் இருக்கும் வீட்டில் இப்படி எல்லாம் செய்யாதே, வெளியே போ’ என குமாா் கூறியுள்ளாா். அதனால், வீட்டில் இருந்து வெளியே சென்றவா், இரவில் அவரது அம்மா லட்சுமியின் வீட்டுமுன் படுத்து தூங்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

காலை அருகில் உள்ளவா்கள் அவரது கணவா் குமாருக்கு தகவல் தெரிவித்தனா். குமாா் வந்து பாா்த்தபோது, கயல்விழியின் முகத்தில் படுகாயங்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். மயக்கம் தெளிந்த கயல்விழியிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இரவு அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ்கண்ணன் (42) வீட்டுக்கு சென்ற கயல்விழி தகராறு செய்ததால், மதுபோதையில் இருந்த சுரேஷ்கண்ணன் அவரை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷ்கண்ணன் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments