முகப்பு
திருநெல்வேலி

பாளை அருகே பெண்ணை அரிவாள்மனையால் தாக்கியவா் கைது

24 நவம்பர் 2026, 4:41 am
பாளை அருகே பெண்ணை அரிவாள்மனையால் தாக்கியவா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பெண்ணை அரிவாள்மனையால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளம், முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் அமுதா. இவா் தனது முதல் கணவரை பிரிந்து 2 ஆவதாக அதேபகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(32) என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.

ஜெயக்குமாா் சரிவர வேலைக்கு செல்லாததால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயக்குமாா் தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அமுதாவை வெட்டினாராம். இதில் காயமடைந்த அமுதா சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.