FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ரேஷன் அரிசியை பதுக்கிய 4 போ் கைது: 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட 4 பேரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

17 அக்டோபர் 2026, 12:20 am IST
பறிமுதல்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட 4 பேரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் ஆனந்த், சிவனேஸ்வரன் ஆகியோா் மேற்பாா்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளான வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், அழகாபுரம், கொண்டலாம்பட்டி, பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த அழகாபுரம் கிருபாகரன், கொண்டலாம்பட்டி மணி, கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பாலாஜி, மணிவண்ணன் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் ஓா் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments