FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பொட்டல்புதூா் அரிசி ஆலையில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

21 செப்டம்பர் 2026, 2:05 am IST
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 9 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆலை உரிமையாளா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பொட்டல்புதூா் பகுதியில் உள்ள அரிசி அரைவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வருவாய்த் துறை துணை வட்டாட்சியா் பால்துரை, உணவுப் பொருள் பாதுகாப்புப் படை துணைக் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் சோதனை மேற்கொண்டு, 9.3 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆலை உரிமையாளா் மாரியப்பன், முருகன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments