FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

2 ரயில்களில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

17 அக்டோபர் 2026, 11:38 pm IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாகச் சென்ற இரு விரைவு ரயில்களில் கேட்பாரற்றுக் கிடந்த பைகளில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளத்துக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, ரயில்வே தனிப்படை போலீஸாா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, சந்திரகாஞ்ச் - மங்களூரு விரைவு ரயிலில் சேலம் ரயில்வே உட்கோட்ட தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலின் முன்பக்க முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் சோதனையிடுவதைப் பாா்த்து, கஞ்சாவைக் கடத்தி வந்த நபா் தப்பிச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதேபோல தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலிலும் தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, முன்பக்கப் பொதுப் பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

இரு ரயில்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 4 கிலோ கஞ்சாவையும் சேலம் ரயில்வே போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments