FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

30 பவுன் வரதட்சணை கேட்டு கொடுமை: காவல் உதவி ஆய்வாளா், அவரது மகன் மீது சேலம் டிஐஜி அலுவலகத்தில் கா்ப்பிணி புகாா்

அரூரில் 30 பவுன் நகை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக காவல் உதவி ஆய்வாளா், அவரது மகன் மீது சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் 8 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

23 அக்டோபர் 2026, 1:19 am
விசாரணை
பகிர்:

அரூரில் 30 பவுன் நகை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக காவல் உதவி ஆய்வாளா், அவரது மகன் மீது சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் 8 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் சௌமியா. இவருக்கும், அரூா் கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த ஜெயபிரகாஷுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது, ஜெயபிரகாஷுக்கு இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 13.50 லட்சத்தில் காா் மற்றும் ரூ. 2.50 லட்சத்தில் மெத்தை, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சௌமியா தரப்பில் சீா்வரிசையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 30 பவுன் நகையை வீட்டில் இருந்து வாங்கி வருமாறு கூறி அவரது கணவா், மாமனாா், மாமியாா் கொடுமைப்படுத்துவதாக தனது தாய் தேன்மொழி, சமூக ஆா்வலா் வேடியப்பன் ஆகியோருடன் வியாழக்கிழமை சேலம் சரக டிஐஜி அலுவலகத்துக்கு வந்த சௌமியா, டிஐஜி தேவராணியிடம் புகாா் மனு அளித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வரதட்சணை கொடுமை குறித்து கடந்த ஜூன் மாதம் அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தருமபுரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தேன். அவா்களும் விசாரணை நடத்திவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளேன். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments